தேனி: கடத்தல் அரிசியா? - முட்புதரில் கொட்டப்பட்ட 500 கிலோ அரிசி!!
பொது முடக்கத்தால் ஏழை-எளிய மக்கள் உணவின்றி பசியும் பட்டினியுமாக ஒருபுறம் தவித்து வரும் நிலையில், தேனியில் சுமார் 500 கிலோ அரிசி வீணாக கீழே கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தேனி மாவட்டம் போடியில் மயானம் செல்லும் பாதையில் உள்ள முட்புதர்களில் அரிசி குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதி ஏழை-எளிய மக்கள், மூட்டை மூட்டையாக அரிசியை அள்ளிச் சென்றனர். அரிசி பூச்சி, புழு பிடித்து காணப்பட்டிருந்த நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல், அடுத்த வேளை உணவுக்காக மக்கள் அரிசியை எடுத்துச் சென்றனர்.
பொது முடக்கத்தால் ஏராளமானோர் உணவின்றி தவிக்கும் சூழலில், சுமார் 500 கிலோ அரிசியை வீணாக்கி, அவற்றை கீழே கொட்டிச் சென்றது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அரிசியை பதுக்கி வைத்து வீணாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.