ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்க முடியாது: மத்திய அரசு!

ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்க முடியாது: மத்திய அரசு!

ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை நடப்பாண்டே வழங்க முடியாது: மத்திய அரசு!
Published on

மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இந்த ஆண்டே இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் நடப்பாண்டே 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில  இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி  பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 50 சதவீதம் அல்லது 27 சதவீதம் என எந்த இட ஒதுக்கீடும் இந்த ஆண்டே கொடுக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com