\
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கோவாவில் சிக்கித் தவித்த  50 பேர் தமிழகம் வருகை..!

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கோவாவில் சிக்கித் தவித்த 50 பேர் தமிழகம் வருகை..!

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கோவாவில் சிக்கித் தவித்த 50 பேர் தமிழகம் வருகை..!
Published on

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கோவாவில் இருந்து 50 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அரும்பராம்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, சுத்தமலை, திருவரங்கம் உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட கிராமங்களில் இருந்து 200 தொழிலாளர்கள் கோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் கோவாவில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் குறித்த செய்தி புதியதலைமுறையில் வெளியானது

இந்நிலையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், அவர்களை சொந்த ஊர் கொண்டுவருவதற்காக இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்து கோவாவிற்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று இரவு அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்தடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com