சாம்பாரில் பூரான்... நாகை அரசு செவிலியர் பயிற்சிபள்ளியை சேர்ந்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்

சாம்பாரில் பூரான்... நாகை அரசு செவிலியர் பயிற்சிபள்ளியை சேர்ந்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்
சாம்பாரில் பூரான்... நாகை அரசு செவிலியர் பயிற்சிபள்ளியை சேர்ந்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு பயிலும் 50 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், 20 பேர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 287 மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கடந்ததால் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com