சென்னையில் வைக்கப்பட்ட 50 இராட்சத பேனர்கள்.. தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர்..!

சென்னையில் வைக்கப்பட்ட 50 இராட்சத பேனர்கள்.. தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர்..!
சென்னையில் வைக்கப்பட்ட 50 இராட்சத பேனர்கள்.. தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர்..!

அனுமதியின்றி இரவோடு இரவாக இராட்சத விளம்பர பலகைகள் வைத்தவர்களை மடிப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை பள்ளிக்கரணை அருகே, மென்பொறியாளர் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேனர் விழுந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பேனர்கள் வைப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதனிடையே சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் 50-க்கும் மேற்பட்ட இராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் கீழ்கட்டளை ஏரி அருகே வெற்றிவேல் என்பவர் காமேஷ் என்பவரின் மூலம் சட்டவிரோதமாக மேலும் இராட்சத விளம்பர பேனர்களை வைக்க முயற்சி செய்ததாக குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து ஆய்வாளர் சிவசங்கரன், சம்பந்தபட்டவர்களிடம் பேனர் வைத்ததற்கான அனுமதி சீட்டைக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சுபஸ்ரீ விபத்துக்கு முன்னர் காவல் துறையினரிடம் வாங்கிய அனுமதி சீட்டைக் காண்பித்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் இந்த அனுமதி சீட்டு செல்லாது என்று கூறி பேனர் வைக்க தடைவிதித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com