ஓர் ஆண்டில் 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடல் ! தமிழக அரசின் குறிப்பில் தகவல்
தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாக பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17 ஆயிரமாக குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 ஆயிரம் கோடியாக இருந்த முதலீடு என்பது 25 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில் 2016-17 ஆம் ஆண்டில் 18 லட்சத்து, 97 ஆயிரத்து 619 வேலைவாய்ப்புகள் இருந்த நிலையில் இது 2017 -18ல் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது.