\
“கொரோனா பாதித்தவர்களுக்காக 50,000 படுக்கைகள் தயார்” - எஸ்.பி.வேலுமணி

“கொரோனா பாதித்தவர்களுக்காக 50,000 படுக்கைகள் தயார்” - எஸ்.பி.வேலுமணி

“கொரோனா பாதித்தவர்களுக்காக 50,000 படுக்கைகள் தயார்” - எஸ்.பி.வேலுமணி
Published on

கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக போதிய படுக்கைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் சிறப்பு மையங்களில் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா பாதித்த நபர்களின் வீடுகளில் உள்ள பிற நபர்களையும் தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com