மது வாங்க 5 வயது மகனை அழைத்துச்சென்ற தந்தை : கடத்தப்பட்ட சிறுவன்
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு தந்தை அழைத்துச் சென்ற 5 வயது சிறுவன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கடத்தப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் குமரபிரசாத். இவர் தனது 5-வயது குழந்தை குமரகுருவுடன் ஒரகடம் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி சாலையிலேயே குடித்து உள்ளார். போதை தலைக்கேறியதால் சாலையில் படுத்து உறங்கியுள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்தி 5வயது சிறுவன் குமரகுருவை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார்.
Read Also -> திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
கணவர் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த குமாரசாமியின் மனைவி முருகம்மாள், தன் கணவனையும் தன் மகனையும் தேடிச் சென்றுள்ளார். அப்போது மதுபான கடை வாசலில் மயங்கி கிடந்த தனது கணவனை எழுப்பி தன் குழந்தை எங்கே என்று கேட்கும் பொழுது தான், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஒரகடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகே இருந்த ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் வீடியோவை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் அடையாளம் தெரிய நபர் ஒருவர் குழந்தையை அழைத்துச்செல்வது தெரியவந்துள்ளது.