\
டெங்கு காய்ச்சலால் 5 வயது குழந்தை பலி : விருதுநகரில் சோகம்

டெங்கு காய்ச்சலால் 5 வயது குழந்தை பலி : விருதுநகரில் சோகம்

டெங்கு காய்ச்சலால் 5 வயது குழந்தை பலி : விருதுநகரில் சோகம்
Published on

விருதுநகரில் டெங்கு காய்ச்சாலல் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி அரசகுளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்பவரின் மகள் சஞ்சனா (5). இச்சிறுமி சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சஞ்சனாவின் உடல் இறுதி சடங்கிற்காக சொந்த ஊரான அரசகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. டெங்கு காய்ச்சலால் ஐந்து வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com