சிறுவன் உயிரிழப்புpt desk
தமிழ்நாடு
காஞ்சிபுரம்: விவசாய கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு; காவல்துறை விசாரணை
மணிமங்கலம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கோகுல்
காஞ்சிபுரம் மாவட்ட மணிமங்கலம் அருகே நாட்டரசன்பட்டு ஊராட்சி, வடமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் இன்று பம்பு செட் அருகில் உள்ள தோட்டத்தில் பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அப்போது தோட்டத்துக்கு அருகில் விளையாடி வந்த இவரது ஐந்து வயது மகன் புகழ் அழகன் என்பவர், அருகில் இருந்த தரை கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
Police stationpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மணிமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.