HMPV
HMPVமுகநூல்

புதுச்சேரியில் பதிவான HMPV|5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு!

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு எச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Published on

சீனாவில் அதிகளவில் பரவி வரும் எச்எம்பிவி வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து, அச்சப்படத் தேவையில்லை என சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் 2 பேர் உட்பட இந்தியாவில் 13 ஆக உயர்ந்துள்ளது இந்த வைரஸ் தொற்று பாதிப்பு.

இந்தவகையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமி ஒருவருக்கும் எச்எம்பிவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

HMPV
Nerpada Pesu | ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பின் கணக்குகள் என்ன?

இதுகுறித்து புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,: ”புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அந்த சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து அந்த சிறுமி நலமாக உள்ளார். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com