5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு?

5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு?

5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு?
Published on

திருச்சி அருகே 5 வயது சிறுமி மரணம் தொடர்பாக தாயின் இரண்டாவது கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் முத்துப் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் லத்திகாஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்து கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்த நித்திய கமலா மகளை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த குழந்தை மயக்கம் அடைந்தது. இதனையடுத்து உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சிறுமி லத்திகா ஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திய கமலத்தை கைது செய்தனர்.

இதனிடையே போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டபோது, நித்திய கமலத்திற்கும் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் நித்திய கமலத்திற்கும் பிரசன்னாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதனையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்திற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதனிடையே முத்துப் பாண்டியனிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துப் பாண்டியன் அடித்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். முத்துப் பாண்டியனை காப்பாற்றுவதற்காக, குழந்தையை தான் அடித்ததாக நித்திய கமலம் கூறியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com