\
சாத்தூர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 தொழிலாளர்கள் பலி

சாத்தூர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 தொழிலாளர்கள் பலி

சாத்தூர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 தொழிலாளர்கள் பலி
Published on

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com