நாயின் மீது மோதிய மினி லாரியை துரத்தி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நாயின் மீது மோதிய மினி லாரியை துரத்தி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நாயின் மீது மோதிய மினி லாரியை துரத்தி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அரியலூரில் பழைய துணி என்று கூறி லாரியில் கடத்தப்பட்ட 50 லட்சம் மதிப்புடைய 5 டன் குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் சிலால் என்ற கிராமத்தில் தா.பழூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கம் நோக்கி சென்ற லாரி ஒன்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனையடுத்து தா.பழூர் காவல்துறை ஆய்வாளர் ஜெகதீசன் லாரியை விரட்டி பிடித்து ஓட்டுனரிடம் லைசன்ஸ் கேட்டுள்ளார். ஓட்டுநர் பயந்து தப்பி ஓடிய நிலையில் லாரியை ஆய்வாளர் சோதனையிட்ட போது அதில் பழைய துணி என்று கூறி குட்கா மூட்டை மூட்டையாக கடத்தி சென்றது தெரியவந்தது‌.

அதில் 48 சணல் சாக்கு மூட்டைகள், 24 வெள்ளை சாக்கு மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகளில் குட்கா கடத்தியது தெரியவந்தது.இ தன் எடை பார்த்தபோது அது 5 டன் எனவும், அதன் மதிப்பு 50 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com