\
சொகுசு வசதிகள் புகார்: 5 கைதிகள் அதிரடி மாற்றம்

சொகுசு வசதிகள் புகார்: 5 கைதிகள் அதிரடி மாற்றம்

சொகுசு வசதிகள் புகார்: 5 கைதிகள் அதிரடி மாற்றம்
Published on

புழல் சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து 5 கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ரபீக்கை கோவை சிறைக்கு மாற்ற ஆணையிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலுள்ள முகமது இப்ராஹிம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளார். முகமது ரிகாஸ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

விசாரணை கைதிகளான, முகமது ஜாகீர் வேலூர் சிறையிலும், ரபீக் என்கிற நூருதீன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்ற சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார். சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுக்லா தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com