தமிழ்நாடு
மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை யாகப்பா நகரில் கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறினர். இந்த சோக சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.