\
பட்டாசு ஆலை வெடிவிபத்து : 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்து : 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்து : 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
Published on

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் ராஜலட்சுமி ஃபையர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடியிருக்கிறார்கள். ஆனால் வெடிவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. வெடிவிபத்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

உயிரிழந்தவர்களின் முழுமையான தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com