\
சம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது 

சம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது 

சம்பள பாக்கி கேட்டதற்கு சரமாரி அடி - 5 பேர் கைது 
Published on

ஓட்டேரியில் சம்பள பாக்கியை கேட்ட மேற்பார்வையாளரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சன்ஜல். வயது 32. இவர் ஓட்டேரியில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி கட்டடப் பணியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அந்த நிறுவனம் சார்பில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கி இருப்பதால் அதை நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். 

இதையடுத்து கட்டட நிறுவன மேலாளர் மற்றும் காவலாளிகள் 5 பேர் சேர்ந்து சம்பள பாக்கி கேட்டு வந்த சன்ஜலை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சன்ஜால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுபற்றி ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் தாம்பரத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது 47), வியாசர்பாடியை சேர்ந்த கலைமணி (வயது 36), முருகன் (வயது 37), பாலமுருகன் (வயது 36) மற்றும் வடபழனியை சேர்ந்த சிவகுமார் (வயது 50) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com