\
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா : அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ள தகவலில், இந்தோனேஷியாவில் இருந்து வந்த 4 பேருக்கும், அவர்களின் சுற்றுலா ஆலோசகராக இருந்த சென்னையை சேர்ந்தவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு பாதிப்பு இருப்பது சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர்த்து டீக்கடை உட்பட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com