\
பட்டப்பகலில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு

பட்டப்பகலில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு

பட்டப்பகலில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு
Published on: 

பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்தவர் கேசவன். வழக்கறிஞரான இவர் இன்று காலை சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கேசவனை அந்தக் கும்பல் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கேசவனை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேசவனை தாக்கிய கும்பல் குறித்தும், தாக்குதலுக்கான பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரித்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com