சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு: புதுக்கோட்டையில் கோர விபத்து

புதுக்கோட்டையில் சாலையோரம் தேநீர் அருந்தி கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு.
புதுக்கோட்டை
புதுக்கோட்டைபுதிய தலைமுறை

செய்தியாளர்: முத்துபழம்பதி

---------

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் நமணசமுத்திரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள காவல்நிலையம் அருகே தேநீர் அருந்தி கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதி உள்ளது. அதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓம்சக்தி மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வந்த 2 வேன்களும் (இதில் சென்னை திருவள்ளூரை சேர்ந்த பக்தர்கள் இருந்துள்ளனர்), திருக்கடையூரில் இருந்து வந்த காரும் (இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் இருந்துள்ளனர்), நமணசமுத்திரம் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள தேநீர் கடை அருகே நின்றுள்ளது. 3 வாகனங்களிலும் இருந்து தேநீர் அருந்த சிலர் கீழே இறங்கியுள்ளனர். மற்றவர்கள் வாகனத்திலேயே இருந்துள்ளனர்.

புதுக்கோட்டை
புயல், வெள்ளம் பாதித்த 10 மாவட்டங்கள்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மேற்குறிப்பிட்ட வாகனங்களின் மீது மோதியது.

இதில் வாகனத்தில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 வயது சிறுமி உட்பட 19 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், சுரேஷ், சதீஸ், ஜகன்நாதன், சாந்தி என்ற பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநரின் அலட்சியமே முழுக்க முழுக்க இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com