\
தமிழகம் முழுவதும் 5 லட்சம் தபால்கள் தேக்கம்....!

தமிழகம் முழுவதும் 5 லட்சம் தபால்கள் தேக்கம்....!

தமிழகம் முழுவதும் 5 லட்சம் தபால்கள் தேக்கம்....!
Published on: 

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே  நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான தபால்கள் தேங்கியுள்ளன.

கடந்த மாதம் மே 22-ம் தேதி முதல் தபால் ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய ஆணைய பரிந்துரையின்படி சம்பளம் வழங்க கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு கிராம மற்றும் தலைமை தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான  தபால்கள் தேங்கியுள்ளன. மேலும் மணியார்டர், துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com