தமிழ்நாடு
பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
செங்கல்பட்டு அருகே உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை எப்போதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். 24 மணி நேரமும் இப்பகுதிகளில் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 110 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், சிசிடிவி மற்றும் அதன் உபகரணங்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.