\
ஈரோடு: வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

ஈரோடு: வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

ஈரோடு: வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
Published on

ஈரோடு அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த 8 பேர் இன்று காலை பழனிக் கோயிலுக்கு ஆம்னி வேனில் சென்றுள்ளனர். பழனியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பாரப்பாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த சிமெண்ட் லாரியின் மீது வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேனில் பயணித்த 4 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேரின் உடலையும் மீட்ட பொதுமக்கள் பெருந்துறை ஐஆர்டிடி-க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த 3 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அருக்காணி, புவனேஸ்வரி, தேன்மொழி, தெய்வாணை மற்றும் ஓட்டுநர் படையப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் குமரேசன், முத்து மற்றும் மோகன்குமார் என்பதும் தெரியவந்ததுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com