மத்திய பட்ஜெட் 2025 - 2026
மத்திய பட்ஜெட் 2025 - 2026எக்ஸ் தளம்

மத்திய பட்ஜெட் 2025 | மிடில் கிளாஸ் மக்களுக்கான 5 அறிவிப்புகள்.. என்னென்ன?

2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்களுக்கான முக்கிய 5 அறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்..
Published on

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன் தினம் (பிப்.1) தாக்கல் செய்தார். மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வருமா என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் , வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு சாதகமாக வெளியான அறிவிப்புகளில் முக்கியமான ஐந்து அறிவிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.  

மத்திய பட்ஜெட் 2025 - 2026
மத்திய பட்ஜெட் | “தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டப்பட்டு உள்ளது” - தமிமுன் அன்சாரி

மிடில் கிளாஸ் மக்கள் கவனிக்கவேண்டிய 5 அறிவிப்புகள்..

முதலாவதாக புதிய வரி  தாக்கல் முறையில் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவை இனி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய வரி விதி விதிப்பு நடைமுறைகளில் எந்த அறிவிப்பும் வெளியாகாத சூழலில், புதிய வரி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனி நபருக்கு வரி இல்லை என்ற அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகியிருக்கிறது. மாத வருமானமாக 1 லட்சம் பெறுவோர் இதனால் பயனடைவர்.

இரண்டாவதாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இரண்டு வருடத்தில் இருந்து 4 வருடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எளிதான வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்: 2025 -2026
மத்திய பட்ஜெட்: 2025 -2026முகநூல்

அடுத்ததாக வீட்டு வாடகைக்கான வருமானம் 2.5 லட்சத்தை கடந்தால் அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும், இனி அந்த வரம்பு 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்காவதாக மூத்த குடிமக்களுக்கு வட்டி மீதான வருமான வரி பிடித்த வரம்பு  50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஆன்லைன் தளங்களில் டெலிவரி பார்ட்னர்களாக வேலையில் இருக்கும் சுமார் 1 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும். அவர்களது விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2025 - 2026
2025-26 மத்திய பட்ஜெட் | TOP 10 முக்கிய அறிவிப்புகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com