மின்கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் தீக்கிரையான 5 வீடுகள்
திண்டிவனத்தில் மின்கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமாகின.
திண்டிவனம் அடுத்த பெரமண்டூரைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இன்று மாலை இவரின் மனைவி கடைக்குச் சென்றிருந்த நிலையில், இருதய ராஜ் தனது குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மின்கசிவில் இருதயராஜின் கூரை வீடு தீப்பிடித்துள்ளது. இதனைப் பார்த்து அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென வீடும் முழுவதும் பரவி வீட்டிலிருந்த சிலிண்டருக்கும் பரவியது. இதில் சிலிண்டர் அதிக சத்தத்துடன் வெடித்தது. நல்ல வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்கும் முன்னரே இருதராஜ் குழந்தைகளுடன் வெளியேறிவிட்டார். இருப்பினும் மேற்கொண்டுபரவிய தீயால் வீட்டின் அருகிலிருந்த குமார், ஜெமினி, மார்கண்டேயன், மூர்த்தி ஆகியோரின் வீடுகளும் தீப்பிடித்து மளமளவென்று எரியத் தொடங்கியன.
இதில் 5 வீடுகளிலிருந்த டி.வி, பிரிட்ஜ், கிரைண்டர், நகை மற்றும் பணம் ஆகியவை முற்றிலும் எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு படையினர் தண்ணீர் பீய்ச்சி தீயை அணைக்க முயன்றனர்.