ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை

ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை
ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

இந்த பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது  எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com