தாம்பரம் பாலத்தில் 5 அடி ஆழப் பள்ளம் - உடனே சீர்செய்ய மக்கள் கோரிக்கை

தாம்பரம் பாலத்தில் 5 அடி ஆழப் பள்ளம் - உடனே சீர்செய்ய மக்கள் கோரிக்கை

தாம்பரம் பாலத்தில் 5 அடி ஆழப் பள்ளம் - உடனே சீர்செய்ய மக்கள் கோரிக்கை
Published on

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை, விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டும் எனறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில், 5 அடி ஆழம், 1 1/2 அடி நீளம் அளவில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பள்ளத்தால் வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கவும், பள்ளத்தை உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாலையில் வரும் வாகனங்கள் பள்ளத்தை கண்டும் காணாமல் கடந்து செல்வதாகவும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தெரியாமல் பள்ளத்தில் சிக்கினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com