\
டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Published on

டவ் தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் டவ் தே புயல் நிலைகொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக மாறும் எனவும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நீலகிரி, தேனி, ஈரோடு, மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 19 ஆம் தேதி வரை நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com