புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!

புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தில் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்தார். சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச்சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில்,

1.வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்
2. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
3. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
4.இந்தி திணிப்பை எதிர்ப்போம்
5.மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என கலைஞரின் ஐந்து கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். 

சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com