Studentspt desk
தமிழ்நாடு
அரியலூர்: விளையாட்டு வினையானது - கள்ளிப்பால் குடித்த 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
அரியலூர் அருகே விளையாட்டுத்தனமாக கள்ளிப்பால் குடித்த 5 சிறுவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும், 5ஆம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவரும் விளையாட்டுத்தனமாக கள்ளிப்பாலை சாப்பிட்டுப் பார்த்துள்ளனர். பின்னர் பதற்றத்தில் அம்மாணவர்கள் தாங்கள் கள்ளிப்பாலை சுவைத்ததை இல்லம் தேடி கல்வி ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.
Hospitalpt desk
சுதாரித்துக் கொண்ட அவர், உடனடியாக குணமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொல்லவே, அங்கே சிறுவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.