தெருவோரத்தில் படித்து 499 மதிப்பெண்கள்! - 12ம் வகுப்பு தேர்வில் அசத்திய துப்புரவு பணியாளரின் மகள்!

சென்னையின் சாலையோரத்தில் தங்கியிருந்து, விளக்கு வெளிச்சத்தில் படித்து, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார் மோனிஷா என்ற மாணவி.
மோனிஷா
மோனிஷாWeb

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் திண்டுகல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி, 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷும் வாழ்த்தை தெரிவித்திருந்தார். இவருக்கு மத்தியில் சென்னையின் சாலையோரத்தில் அமர்ந்து படித்த மோனிஷா என்ற மாணவி, 12-ம் வகுப்புத் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

சுகாதாரப் பணியாளரான ஒரு தாயின் மகள்! வறுமையிலும் விடாத தன்னம்பிக்கை!

தற்போதெல்லாம் பல மாணவர்கள், படிப்பதற்கு தங்களுக்கென தனியாக அறை, டியூஷன், செல்போன், லேப்டாப் வசதிகள் என அனைத்தையும் வைத்துக்கொண்டு தான், தங்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராகின்றனர். ஆனால் சென்னையின் வால் டேக்ஸ் சாலையில் வசிக்கும் மோனிஷா என்ற மாணவி, தங்குவதற்கு வீடு கூட இல்லாத நிலையில், சிறந்த மதிப்பெண்கள் பெற்று 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று அசத்தியுள்ளார்.

தேர்வு முடிவு
தேர்வு முடிவுPT

வால் டேக்ஸ் சாலையில் ஒரு சிறிய தற்காலிக கூடாரத்தில், தன் தாய், சகோதரன் மற்றும் அண்ணியோடு வசித்து வருகிறார் மோனிஷா. இவரின் தாயார் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வருகிறார். மோனிஷாவின் வாழ்வில் வறுமை மிகவும் வாட்டியபோதிலும், 12-ம் வகுப்பு வரை விடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார். தான் தங்கியிருக்கும் இடமோ, சுற்றியிருக்கும் சூழலோ அவர் படிப்புக்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை எனக் கூறும் அவர், வருங்காலத்தில் காவல்துறையில் சேர ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தொந்தரவு இல்லாமல், தெருவிளக்கில் படிக்கவே விரும்புகிறேன்!

தேர்ச்சிபெற்றது குறித்து பேசியிருக்கும் மோனிஷா, “முடிந்தவரைப் பள்ளியிலேயே படித்து முடிக்க முயற்சி செய்வேன். ஆனால் ஏதேனும் பாடம் மிச்சமிருந்தால் , தெரு விளக்கு வெளிச்சத்தில் சாலையிலேயே அமர்ந்து படிப்பேன். நான் தெருவில் அமர்ந்து படிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் நாங்கள் மிகவும் சிறிய இடத்தில் வசிக்கிறோம், பிறர் வீடுகளுக்குச் சென்று நான் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை. கருணாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவத்தின் உதவியுடன் என் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வேன்.

மோனிஷா
மோனிஷாWeb

சிறு வயதில் இருந்தே நான் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரு அதிகாரியாக மாறுவது தான், எனக்கு அதிகாரத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நிலைக்கு நான் உயர விரும்புகிறேன். தற்போது பி.ஏ படிக்க நினைத்து அதற்காக விண்ணப்பித்துள்ளேன். அதன் பிறகு போலீஸ் அதிகாரியாகும் எனது கனவைத் தொடருவேன்” என்று புன்னகையுடன் பகிர்ந்துள்ளார் மோனிஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com