\
தமிழகத்தில் கொரோனா: தொற்று குறைந்தாலும் குறையாத உயிரிழப்புகள்

தமிழகத்தில் கொரோனா: தொற்று குறைந்தாலும் குறையாத உயிரிழப்புகள்

தமிழகத்தில் கொரோனா: தொற்று குறைந்தாலும் குறையாத உயிரிழப்புகள்
Published on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் குறையாமல் அதே சராசரியில் இருந்து வருகிறது.

கடந்த மே 25 ஆம் தேதி 468 பேரும், 26 ஆம் தேதி 475 பேரும், 27 ஆம் தேதி 474 பேரும் 28 ஆம் தேதி 486 பேரும் கோரோனாவால் உயிரிழந்தனர். கடந்த மே 30 தேதி அதிகபட்சமாக 493 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கோரோனாவால் 490 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு குறையாமல் அதே நிலையில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com