கோயிலுக்கு சென்ற குடும்பம் : வீட்டை கொள்ளையடித்த கும்பல்
சென்னை, வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை, வளசரவாக்கம் ஸ்ரீலட்சுமி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். வீட்டில் ஆளில்லாத நேரத்தில், அவரது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். அதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளைக் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.