திருமண நாளில் மணப்பெண்ணுக்காக வைத்திருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை..!

திருமண நாளில் மணப்பெண்ணுக்காக வைத்திருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை..!

திருமண நாளில் மணப்பெண்ணுக்காக வைத்திருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை..!
Published on

வாலாஜாவில் மணப்பெண்ணுக்கு சீர் வரிசை கொடுக்க வைத்திருந்த 48 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கிராமணி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(50). இவர் பீடி மண்டி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகளான பவித்ராவிற்கு இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மாலை சரவணன் குடும்பத்துடன் ஆரணி சென்றார். திருமணம் முடித்து இன்று வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பெண் சீர்வரிசைக்காக கொடுக்க வைத்திருந்த 48 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாலாஜாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிவிட்டு சென்றுள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் குறித்து சரவணன் குடும்பத்தினர் கூறும்போது தங்கள் வீட்டில் வைத்திருந்த பழைய தங்க நகைகள் மற்றும் மகளுக்கு சீராக கொடுக்க வைத்திருந்த நகைகள் என அனைத்தும் திருடு போனதாக தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com