ரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு
ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டாக்டர் இளவரசன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்துவிட்டதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 70வது சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒருபுறமும், திரைப்படப் பிடிப்புகளில் தீவிரமாக நடித்து வரும் நிலையில், மறுபுறமும் மக்கள் மன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Read Also -> மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்