சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் காட்சி

சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் காட்சி

சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் காட்சி
Published on

சென்னையில் 45-ஆவது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில், கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகள் உள்ளிட்ட மொத்தம் 12 பேருக்கு முதல்வர் விருது வழங்க இருக்கிறார்.

மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில், சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் நூல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com