\
திருப்பூரைச் சேர்ந்த 44 வயதுடைய நபருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

திருப்பூரைச் சேர்ந்த 44 வயதுடைய நபருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

திருப்பூரைச் சேர்ந்த 44 வயதுடைய நபருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி
Published on

திருப்பூர் மாநகர்,  15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண் ஒருவருக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த நபர் சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன்காரணமாக இரு தினங்களுக்கு முன்பாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்துள்ளார்.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . தற்பொழுது அந்த நபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com