நெல்லை: தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு - 43 பேர் பத்திரமாக மீட்பு; 2 பேர் மாயம்

நெல்லை: தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு - 43 பேர் பத்திரமாக மீட்பு; 2 பேர் மாயம்
நெல்லை: தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு - 43 பேர் பத்திரமாக மீட்பு; 2 பேர் மாயம்
பணகுடி கன்னிமாரான் தோப்பு ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 15  பேர் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர். 43 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல்போன இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
நெல்லை மாவட்டம் பணகுடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்தது. இதனால் கன்னிமாரான் தோப்பு ஓடையில் தண்ணிர் வந்தது. இன்று விடுமுறை என்பதால்  குளிப்பதற்காக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதிக்கு கார்களிலும், பைக்குகளிலும்  திரண்டுவந்தனர். கன்னிமாரான் தோப்பு தடுப்பணையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குளித்துக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் மதியம் 4 மணி அளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் குளித்துக் கொண்டிருந்த 15 பேரை வெள்ள நீர் இழுத்துச் சென்றது. இதில் 12 பேர் கரைகளை பிடித்து உடனடியாக கரை ஒதுங்கினர். இருவர் தண்ணீருக்கு நடுவில் இருந்த திட்டில் மேலே ஏறி நின்று கொண்டனர். மேலும் வெள்ளம் அதிகமானது அப்போது திட்டில் நின்ற நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்த சியாம் என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நடு தண்ணீரில் இருந்த திட்டில் இருந்து காப்பாற்றுபடி அழுதான். மேலும், குமரி மாவட்டம் சின்னமுட்டத்தைச் சேர்ந்த நாயகம் என்பவர் மாயமானார். தொடர்ந்து இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி 14 பேரை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து தடுப்பணையைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள்ளும் சிலர் சிக்கிக் கொண்டனர். அவர்களும் அங்கிருந்து கூச்சல் எழுப்பினர். இதனையடுத்து வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் அங்கு சென்று அங்கு சிக்கி இருந்த 29 பேர் உட்பட 43 பேரை மீட்டனர். தொடர்ந்து  மாயமான குமரி மாவட்டம் சின்னமுட்டத்தைச் சேர்ந்த  நாயகம் மற்றும் சரவணனை நீரிலும் மலைப்பகுதிக்குள்ளும் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் வனத்துறை, சப் கலெக்டர், தீயணைப்புத்துறையினர் உள்ளனர்.

இதுகுறித்து நாயகமிடம் குளிக்கவந்த ரோமாரோவிடம் கேட்டபோது, ’’குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளம் வந்து எங்களை அடித்து சென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக கரையில் ஒதுக்கியதால் உயிர்த்தப்பினோம் என்றார். அதேபோல் மார்சல் என்பவரிடம் கேட்டபோது, திடீரென வெள்ளம் வந்து எங்களை அடித்துச்சென்று விட்டது’’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com