\
தீபாவளி பண்டிகையையொட்டி 42 தமிழக மீனவர்களை விடுதலை

தீபாவளி பண்டிகையையொட்டி 42 தமிழக மீனவர்களை விடுதலை

தீபாவளி பண்டிகையையொட்டி 42 தமிழக மீனவர்களை விடுதலை
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி இலங்கை சிறையில் உள்ள 42 தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்படுகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 42 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக யாழ்ப்பாண மீன்வளத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com