1.5 லட்சம் செலவு; 3 மாத உழைப்பு- 40 ஆண்டுகால அரச மரத்தை மீட்டெடுத்த இளைஞர்கள்

1.5 லட்சம் செலவு; 3 மாத உழைப்பு- 40 ஆண்டுகால அரச மரத்தை மீட்டெடுத்த இளைஞர்கள்
1.5 லட்சம் செலவு; 3 மாத உழைப்பு- 40 ஆண்டுகால அரச மரத்தை மீட்டெடுத்த இளைஞர்கள்

கோயில் கட்டுவதற்காக வெட்டப்பட இருந்த மரத்தை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து மீட்டதோடு, கோயில் கட்டடத்திற்கு பதில் சிலையை மட்டுமே நிறுவ முடிவு செய்துள்ள சம்பவம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் புளியகுளம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டது. விநாயகர் கோயில் கட்டிய சிறிது காலத்தில் அங்கு ஒரு அரச மரமும் நடப்பட்டது. ஆண்டுகள் கடக்க, அசுர வளர்ச்சி கண்ட அரச மரத்தின் வேர்கள் கோயிலின் சுவர்கள் மட்டுமல்லாது மக்களின் குடிதண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவற்றிற்கு இடையூறாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஊர்மக்கள், அழியும் நிலையில் இருந்த அந்த அரச மரத்தை வெட்டி அதே இடத்தில் புது கோயில் கட்ட முடிவு செய்தனர்.

ஆனால் அவர்களின் முடிவை ஏற்க மறுத்த அப்பகுதி இளைஞர்கள் ஊர்மக்களுக்கு ஆலமரத்தின் மீதான தங்களது அன்பை புரிய வைத்து, அழியும் நிலையில் இருந்த அரச மரத்தை  உயிர்பிக்க முயற்சி எடுத்தனர். இதற்காக ஊர்மக்களிடம் இருந்து 1 லட்சத்திற்கும் மேலாக நன்கொடை பெற்ற அவர்கள், தமிழ்நாடு வேளாண் கல்லூரியை சேர்ந்த அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மூன்று மாத காலம் ஊர்மக்களோடு இணைந்து மரத்தை உயிர்பிக்கச் செய்துள்ளனர்.

இறுதியில் ஆலமரத்தை சீர்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் புதுக்கோயில் கட்டவேண்டும் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றி, அவ்விடத்தில் அரச மரமே இருக்கலாம் என்ற மனநிலையை கொண்டு வந்துள்ளனர்.அரச மரத்தின் மீது கொண்ட அன்பால் அதனை மீட்ட இளைஞர்கள், மரத்தின் 40 தாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி ஊர்மக்களுக்கு கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com