\
தட்கல் திட்டத்தில் 40 ஆயி‌ரம் மின் இணைப்புகள்: அமைச்சர் தங்கமணி

தட்கல் திட்டத்தில் 40 ஆயி‌ரம் மின் இணைப்புகள்: அமைச்சர் தங்கமணி

தட்கல் திட்டத்தில் 40 ஆயி‌ரம் மின் இணைப்புகள்: அமைச்சர் தங்கமணி
Published on: 

தட்கல் திட்டம் மூலம் இந்த ஆண்டு 40 ஆயி‌ரம் மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் ரா‌லிங்கப்பிள்ளையின் 129ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமை‌ச்சர் தங்‌மணி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தட்டாரத் தெருவில் உள்ள நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி, எம்.பி.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய அமைச்சர், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியங்கள் வைத்துள்ள மின்கட்டண பாக்கிகள் படிப்படியாக வசூலிக்கப்படும் என்றார்.‌‌மேலும் தரிசு நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இலவச மின்சாரம் வழங்குவது கு‌றித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com