ஆவடி: அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட 40 அடி உயர கட்அவுட்! காற்றில் சரிந்ததால் பரபரப்பு

ஆவடியில், இன்று உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், அதற்காக அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 அடி உயர கட்அவுட் மழையின் போது பலத்த காற்று வீசியதால் கீழே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
dmk cut out
dmk cut outpt desk

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு மாலை ஆவடி சேக்காடு அருகே கவரப்பாளையத்தில் உள்ள மைதானத்தில் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆவடி எம்எல்ஏ நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் தலைமையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

cut out
cut outpt desk

இந்நிலையில், அங்கு ராட்சத கட்-அவுட்டுகள் மற்றும் மேடைகள் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்ற மாலை திடீரென காற்று பலமாக வீசியதால் கவரப்பாளையம் மைதானம் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து சாலையில் விழுந்தது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த கட் அவுட் வைக்கும் ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை மாலை வெளுத்து வாங்கிய நிலையில், மழையின் போது அடித்த சூறைக்காற்றின் காரணமாக கட்அவுட் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com