தமிழ்நாடு
மிட்டாய் வாங்கி கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது
மிட்டாய் வாங்கி கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜாங்கம் (28). இவர் ஆஸ்பெட்டாஸ் சீட் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தையை மிட்டாய் வாங்கி கொடுத்து ஏமாற்றி ராஜாங்கம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.