25 நாட்களுக்கு முன் காணாமல் போன 4 வயது சிறுமி: துப்பு கிடைக்காமல் திணறும் கோவை போலீசார்!

25 நாட்களுக்கு முன் காணாமல் போன 4 வயது சிறுமி: துப்பு கிடைக்காமல் திணறும் கோவை போலீசார்!
25 நாட்களுக்கு முன் காணாமல் போன 4 வயது சிறுமி: துப்பு கிடைக்காமல் திணறும் கோவை போலீசார்!

கோவை அருகே  உள்ள குமாரபாளையத்தில் 4 வயது சிறுமி காணாமல் போய் 25 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்

கோவை மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் இளைய மகளான சாமினி (5) கடந்த 5-ம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்தார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் சாமினியை பல இடங்களில் தேடியுள்ளனர், ஆனால் சாமினி கிடைக்காததால் சூலூர் காவல்நிலையத்தில் சாமினியின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்ற காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் தேடினர். ஆனால் சாமினி இருக்கும் இடம் தெரியவில்லை. குமாரபாளைய மக்கள் தீபாவளி கொண்டாட்டம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சாமினி காணாமல்போய் 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. அப்பகுதி இளைஞர்கள் சாமினியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். பலரும் முயற்சிகள் எடுத்து வந்தாலும் இதுவரை சாமினி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com