\
நிர்மல்
நிர்மல்புதிய தலைமுறை

சிறுவனை கடித்த வெறிநாய்! நாட்டுவைத்தியம் பார்த்ததால் முற்றிய நோய்; பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

வெறிநாய் கடித்த 4 வயது சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நாட்டுவைத்தியம் பார்த்ததால் நோய் முற்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

வெறிநாய் கடித்த 4 வயது சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நாட்டுவைத்தியம் பார்த்ததால் நோய் முற்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நிர்மல்
நிர்மல்புதிய தலைமுறை

ராணிப்பேட்டை மாவட்டம் கணபதிபுரத்தை சேர்ந்த சிறுவன் நிர்மலை வெறிநாய் ஒன்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி கடித்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காமல் நாட்டு வைத்தியம் செய்ததாக தெரிகிறது.

நிர்மல்
சீமான், துரைமுருகன், கார்த்திக் மீது எஸ்.பி கொடுத்த புகார்! என்ன நடந்தது? விரிவான பின்னணி!

அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்பட்ட பின்னரே அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். சிறுவனை நாய் கடித்தவுடனேயே உரிய சிகிச்சை எடுத்திருந்தால் அவரை உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com