சென்னை மெரினா கடற்கரையின் நீச்சல் குளத்தில் சோகம்... 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

சென்னை மெரினாவிலுள்ள நீச்சல் குளத்தில் நான்கு வயது ஆண் குழந்தை மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஹரிஹரன். விடுமுறை தினமான நேற்று, தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார் இவர். அப்போது அங்குள்ள அண்ணா நீச்சல் குளத்தில் தனது குடும்பத்தினரோடு குளிக்க சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து அனைவரும் மேலே ஏறியுள்ளனர்.

அப்போதுதான், தனது நான்கு வயது ஆண் குழந்தையான அனிருத் கிருஷ்ணன் மட்டும் காணாமல் போனதை அறிந்துள்ளனர். தொடர்ந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து நீச்சல் குளம் சென்று பார்த்த போது, அங்கு நீச்சல் குளத்தின் அடியில் மயக்க நிலையில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை நீச்சல் குளத்திலேயே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இறந்து போன குழந்தையின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதிஉதவி அறிவித்துள்ளார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com