\
ஆவடியில் ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்

ஆவடியில் ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்

ஆவடியில் ஒரே நேரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்
Published on: 

ஆவடியில் 10-ஆம் வகுப்பு பயிலும் 4 பள்ளி மாணவிகள் ஒரே நேரத்தில் மாயமாகியுள்ளனர்.

ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இரவு
வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறையினர் உயர் எச்சரிக்கை கொடுத்து அனைத்து காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள ரயில் நிலையம். கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com