\
4 Police Personnel Suspended After Coimbatore Prisoner Escapes
கைதி தப்பியோட்டம்Pt web

கோவையில் கைதி தப்பியோட்டம் - 4 காவலர்கள் சஸ்பெண்ட்!

கோவையில் விசாரணை கைதி ராகவன் தப்பியோடிய விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Published on: 

அன்னூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகவன் என்ற கைதி, கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய ஈரோட்டைச் சேர்ந்த ராகவனை (25), போலீசார் கைது செய்திருந்தனர். இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

Pt web

அப்போ,து சிறையின் முதல் நுழைவுவாயில் வழியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ராகவனின் கை விலங்கு கழற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து முதல் நுழைவுவாயிலில் இருந்து இரண்டாவது நுழைவுவாயிலுக்குச் செல்லும் வழியில், போலீசாரின் கண்காணிப்பில் இருந்து திடீரென ராகவன் தப்பியோடியதாகத் தெரிகிறது. இதையடுத்து பந்தயசாலை போலீசார் தப்பியோடிய கைதி ராகவனைத் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தச்சூழலில் தான், தற்போது இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடினர். பின்னர், அவர்களை காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். தொடர்ந்து, தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் பேசுபொருளானது. இவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்த விவகாரத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து, காவல்துறை கவனக்குறைவாக செயல்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்திருந்தார். இந்தச்சூழலில் தான், கோவை விசாரணைக் கைதி தப்பியோடியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

4 Police Personnel Suspended After Coimbatore Prisoner Escapes
மெதுவாக நகரும் புயல் சின்னம் : எங்கே கரையைக் கடக்கும்?தமிழ்நாட்டுக்கு மழை பெய்ய வாய்ப்பா?