\
சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை!

சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை!

சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை!
Published on

சாலை தடுப்புகளை இழுத்துச் சென்று பைக் ரேஸில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்‌க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை போகுவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி போலீஸ் தடுப்பிற்காக பயன்படுத்தும் இரும்பு பேரிகார்டுகளை சாலையில் இழுத்துக் கொண்டே செல்லும் காட்சிகளும், கோட்டூர்புரம் காந்தி மண்டபச் சாலையில் தீப்பொறி பறக்கும் அளவிற்கு இரும்பு பேரிகாடுகளை இழுத்துச் செல்லும் காட்சிகளும் சமூக வளைதளங்களில் வ‌ரலாக பரவின. 

அந்த வீடியோ காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார், இச்செயலில் ஈடுபட்டவர்‌களை தேடி வருகின்றனர். மேலும், ‌அந்த கும்பல் குறித்த தகவல் தெரிந்தால் 9003130103 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com